ETV Bharat / state

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி! - corona updates

மதுரை: கோவிட் - 19 வைரஸ் பரவுவதைத் தடுக்க, டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டுமென தாக்கல்செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
author img

By

Published : Mar 19, 2020, 2:20 PM IST

கோவிட் - 19 வைரஸ் தொற்று மற்ற நாடுகளைப் போல பரவாமல் தடுக்க இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த மாதம் இறுதிவரை தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை சிவகாசியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,”தமிழ்நாட்டில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள், பார்கள் சுகாதாரமற்ற முறையில் அமைந்துள்ளன. இங்கும் கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, மார்ச் மாதம் இறுதிவரை தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவின் விசாரணையை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சென்னையில் இதுபோன்ற பொதுநல மனு விசாரணையில் உள்ளது எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்று - வெறிச்சோடிய தி.நகரில் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.