ETV Bharat / state

திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட மதுரைக் கிளை அனுமதி - திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட அனுமதி

மதுரை: திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai
madurai
author img

By

Published : Nov 26, 2020, 7:17 PM IST

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிரந்தர கடைகள், தரைக்கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் என மூன்றாயிரம் கடைகளுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. கூட்டத்தை குறைக்க கள்ளிக்குடியில் 77.6 கோடி ரூபாய் செலவில் மத்திய காய்கறி வணிக வளாகம் கட்டப்பட்டது. கரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்தவும் உத்தரவிடக் கோரி திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதிகள் காந்தி மார்க்கெட் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

தற்போது, இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. காந்தி மார்க்கெட்டில் 2ஆயிரம் கடைகள் செயல்பட்டு உள்ளன. புதிதாக திறக்கப்பட்ட திருச்சி கள்ளிக்குடி கடையில் 700 கடைகள் மட்டுமே உள்ளதாக வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். பின்பு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கடந்த இரண்டு நாள்களாக காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக உள்ளது" என்றார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், காந்தி மார்க்கெட் தற்காலிகமாக திறக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு தரப்பிலும், என்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பது குறித்து வியாபாரிகள் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நிவர் புயல் பாதிப்பு: கடலூரில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.