பள்ளிக் கல்வித் துறை விளையாட்டு குறியீட்டாளர்கள் சங்கச் செயலர் அன்புசெல்வம் உட்பட 62 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "பள்ளிக் கல்வித் துறையில் விளையாட்டு குறியீட்டாளர்களாக பணியில் சேர்ந்த சுமார் 500 பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவந்தனர். இவர்களில் 227 பேர் 1997-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். விடுபட்ட 219 பேரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நாங்கள் 2016-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டோம்.
தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஆவண எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்களாக பணிபுரிகிறோம். எங்களைப் போல் பணியில் சேர்ந்து 1997-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பணியில் சேர்ந்த எங்களையும் 1997ஆம் ஆண்டு முதல் பணி நிரந்தரம் செய்து அனைத்து பண பலன்களையும் வழங்கி எங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்து உத்தரவிட வேண்டும்"என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க...உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை