ETV Bharat / state

சித்திரை திருவிழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - மதுரை ஆட்சியர் அறிவிப்பு! - கள்ளழகர்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொதுமக்கள் பங்கேற்ற அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சித்திரை திருவிழா
சித்திரை திருவிழா
author img

By

Published : Apr 10, 2021, 4:23 AM IST

மதுரை: மதுரையில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா ஒரு பிரசித்தி பெற்ற ஆன்மீக நிகழ்வாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் என இத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

இதில் உள்ளூர் மக்களைத் தவிர பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாட்டினர் என லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். ஏறக்குறைய 30 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா காலத்தில் மதுரையே விழாக்கோலம் கொள்ளும்.

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக, சித்திரைத் திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றன. அவற்றில் பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிகமாக இருப்பதால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தடை விதித்துள்ளார்.

கடந்த ஆண்டை போலவே பொதுமக்கள் இன்றி, கோயில் வளாகத்திலேயே திருவிழாக்கள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

மதுரை மாநகரில் கரோனா பரவல் தீவிரமாக உள்ள 21 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக மதுரை மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட வீடுகளை அறியும் வண்ணம் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை கிழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்த ஆண்டு எப்படியும் சித்திரை திருவிழா நடந்து விடும் என நம்பிக்கையுடன் இருந்த மதுரை வாசிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஏழுமலையான் வேடத்தில் கைலாச நாட்டு உரிமையாளர்: ட்ரெண்டிங் ஆகும் நித்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.