ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தலைவர்கள் மற்றும் மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நன்மாறன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.