ETV Bharat / state

கோயில் காளை உயிரிழப்பு - ஆட்டம் பாட்டத்துடன் இறுதி அஞ்சலி

மதுரை: மேலூர் அருகே கோயில் காளை உயிரிழந்ததால் ஆட்டம் பாட்டத்துடன் இறுதி அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

jallikattu ox death
jallikattu ox death
author img

By

Published : Dec 4, 2020, 10:41 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காரியேந்தல்பட்டியில் கருப்பண்ணசாமி கோயிலுக்கு சொந்தமான ஜல்லிகட்டு காளையை அப்பகுதியில் உள்ள மக்கள் வளர்த்து வந்தனர்.

இதற்கு செல்லமாக கருப்பு என பெயரிட்டு அன்போடு அழைத்து வந்தனர். இந்த கோயில் காளையானது புகழ்பெற்ற அவனியாபுரம், சிராவயல், கண்டுபட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிவாகை சூடி பெருமை சேர்த்தது.

இந்நிலையில், இன்று(டிச.4) திடிரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதனால் அக்கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். பின்னர் பெண்கள் கும்மியடித்து, வாணவேடிக்கை, ஆட்டம்பாட்டத்துடன் காளையின் உடலை மக்கள் எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

கோவில் காளைக்கு ஆட்டம்பாட்டத்துடன் இறுதி அஞ்சலி

தங்களது பிள்ளை போல வளர்த்த காளை உயிரிழந்ததால் அந்த காளையின் நினைவாக மற்றொரு காளை வளர்க்கப்படுவதாக அம்மக்கள் தெரிவித்தனர். இன்றளவும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஜல்லிகட்டு காளை உயிரிழந்தால் மனிதனுக்கு செய்யப்படும் இறுதி அஞ்சலி போல காளைக்கும் அஞ்சலி செலுத்தபடும்.

இதையும் படிங்க: சிம்ஸ் பூங்காவில் நிறம் மாறிய மேப்பிள் மரத்தின் இலைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.