1971ஆம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்த மதுரையில் 3ஆவது மாநகர மேயராக 1982ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை அதிமுக சார்பில் பட்டுராஜன் பதவி வகித்தார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு மிக நெருக்கமான அரசியல் பிரமுகராக திகழ்ந்தார்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் பதவியில் இருந்துள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று (டிசம்பர் 10) காலமானார். பட்டுராஜன் உடல் சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்டர்நெட் டவர் விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு