ETV Bharat / state

மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு தரிசனம்! - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோலாகலமாக நடைபெற்றது.

மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்:
மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்:
author img

By

Published : Apr 13, 2022, 10:40 AM IST

மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் .

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா, கோயிலில் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்கிட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சூட்டி, செங்கோல் வழங்கப்பட்டது.

மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்

தொடர்ந்து, அம்மனிடமிருந்து செங்கோலை பெற்ற தக்கார் கருமுத்து கண்ணன் சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் மீனாட்சி அம்மனின் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பித்தார். பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக, மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தை குறிக்கும் வகையில் திக்விஜயம் இன்று (ஏப்.13) நடைபெறுகிறது. விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளையும் (ஏப்ரல் 14), மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நாளை மறுநாள் (ஏப்.15) தேதியும் நடைபெறுகிறது.

இதையடுத்து, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் 16ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால் பலத்து காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.

இதையும் படிங்க: 'என்னது.. அழகர் மதுரைக்குள்ள வந்தாரா..?' - அழகரின் ஆயிரமாண்டு வரலாறும் வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு தொகுப்பும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.