ETV Bharat / state

மதுரை அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை - நோயாளிகள் அதிர்ச்சி! - Madurai District News

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பெண்கள் சிகிச்சை வார்டில் எலிகள் அட்டகாசத்தால் நோயாளிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெண்கள் வார்டில் எலிகள் தொல்லை  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை  எலிகள் தொல்லை  மதுரை அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை நோயாளிகள் அதிர்ச்சி  Patients traumatized by rats at Madurai Government Hospital  Madurai Rajaji Government Hospital  Rats are harassing  Madurai District News  மதுரை மாவட்ட செய்திகள்
Madurai Rajaji Government Hospital
author img

By

Published : May 10, 2021, 8:48 AM IST

மதுரை மாவட்டம், தென் மாவட்ட மக்களுக்கு முக்கியமான மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை திகழ்கிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்பொழுது கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் மருத்துவமனை நிரம்பி வழிந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனை பெண்கள் பொது வார்டில் (105-வது வார்டில்) எலிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலிகள் நோயாளிகளின் படுக்கைகளின் மேல் ஏறி குதித்து விளையாடி வருகிறது. தாய்மார்களுடன் பச்சிளம் குழந்தைகளும் இதே வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எலிகள் தொல்லையால் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

பெண்கள் வார்டில் சுற்றித் திரியும் எலிகள்

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர் கூறுகையில்,"தினமும் நோயாளிகள் தின்பண்டங்கள் உணவுகளைக் கொண்டு வந்து வைக்கிறார்கள். இதனால், எலிகள் வருகின்றன. எலிகளை வார்டுக்குள் வராமல் தடுக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவை வந்து விடுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறோம்” எனக்கூறினர்.

இந்த வார்டில், இடநெருக்கடி காரணமாக அருகருகே படுக்கை அமைத்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த வார்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொற்று உறுதியான நோயாளி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அதே வார்டில் இருந்துள்ளார். அதன் பின்பு தான் கரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதையும் படிங்க: வீட்டிற்கு வராதீங்க..போன்ல கேட்டுக்கோங்க..கடிதம் எழுதிவிட்டு ரயில்வே காவலர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.