துபாயிலிருந்து கோரெண்டல் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 143 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் கரோனா அறிகுறிகள் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை இரண்டு கண்காணிப்பு மையங்களுக்கு அழைத்து செல்ல அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இரண்டு குழுக்களாகப் பயணிகள் பிரிக்கப்பட்டு ஒரு குழுவினரை மதுரை சின்ன உடப்பு பகுதியில் உள்ள அரசு கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியிலும் (120 படுக்கை வசதி) மற்றொரு குழுவினரை ஆஸ்டின்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் (60 படுக்கை வசதிகள்)உள்ள மையத்திலும் 14 தினங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களை கண்காணிப்பு மையத்திற்கு அழைத்து செல்வதற்கு இரண்டு பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. இந்நிலையில் நீண்ட நேரமாக தண்ணீரும், உணவும் வழங்காமல் பரிசோதனை என்ற பெயரில் கால தாமதம் செய்துவருவதாகக் கூறி கண்காணிப்பு மையத்திற்கு செல்ல மறுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பரிசோதனையை விமான நிலையத்திலேயே செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் பிறகு 60 மாதங்களுக்கு முன் துபாய்க்குச் சென்று திரும்பி வந்த கணவரை அவரது மனைவியும் குழந்தையும் கண்ணீர் மல்க கண்காணிப்பு மையத்திற்கு சென்று தங்குமாறு கூறிய நெகிழ்வான சம்பவமும் அரங்கேறியது.
இதையும் படிங்க... கரோனா அச்சம்: கொடைக்கானலிலிருந்து வெளியேற்றப்படும் சுற்றுலாப் பயணிகள்