ETV Bharat / state

குழந்தைகள் ஆரோக்கியமாய் உறங்க உதவும் பனையோலைத் தொட்டில்! - பால்மா மக்கள் அமைப்பு

குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் உறங்க வழிவகுக்கும் வகையில், பனையோலைத் தொட்டிலை உருவாக்கியுள்ளது, மார்த்தாண்டத்தை மையமாக கொண்டு செயல்படும் பால்மா மக்கள் அமைப்பு. பனையோலையின் குளிர்ச்சி, மணம் ஆகியவற்றின் மூலம் குழந்தைகள் நல்ல உறக்கத்தையும் புத்துணர்ச்சியையும் பெறும் வகையில் இந்த பனையோலைத் தொட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

palm-cradle-to-keep-babies-sleeping-soundly
குழந்தைகளை ஆரோக்கியமாய் உறங்க வைக்கும் பனையோலைத் தொட்டில்!
author img

By

Published : Aug 26, 2021, 6:58 AM IST

மதுரை: நவீன வசதிகள் ஆயிரம் வந்தாலும் பிறந்த குழந்தைகளை சேலை அல்லது துணியால் ஆன தொட்டிலில் கட்டி தூளி ஆடவிட்டு உறங்க வைப்பது காலங்காலமாக இருந்து வரும் தமிழர்களின் மரபாகும்.

தாயின் கருவறையில் எப்படி குழந்தை உறங்குகிறதோ அதே போன்ற தன்மையில் தொட்டிலில் உறங்கவைக்க நம் முன்னோர்கள் கண்டறிந்த சிறப்பு ஏற்பாடே இந்தத் தொட்டில் முறை. இதனை வைத்துப் பிறந்ததுதான் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்ற பழமொழி.

இன்றைக்கும் கிராமப்புறங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தூளியில் ஆட விட்டு வேலை பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம். நகர்ப்புறங்களில் அந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்கிறது.

பனையொலை தொட்டில்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மார்த்தாண்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உள்பட்ட சாங்கையில் செயல்பட்டு வருகிறது பால்மா மக்கள் அமைப்பு. 400க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களை கொண்ட ஒரு தன்னார்வ நிறுவனம் ஆகும். பனையை மையமாகக் கொண்ட பல்வேறு பாரம்பரியத் தொழில்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பனையோலைகளில் பல்வேறு வகையான பொருள்கள், பனம்பழச்சாறு தயாரிப்பு, இளைஞர்களுக்கு பனையேறுதல் பயிற்சி எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள்.

அண்மையில் இந்த அமைப்பினர் குழந்தைகளுக்காக பனையோலையில் தொட்டில் ஒன்றை வடிவமைத்துள்ளனர். தமிழ்நாட்டிலே முதன்முறையாக உருவாக்கப்பட்ட இந்தத் தொட்டில், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஊக்கம் தருவதாகும்.

palm-cradle-to-keep-babies-sleeping-soundly
பனையோலைத் தொட்டில்

இதுகுறித்து பால்மா மக்கள் அமைப்பின் செயல் இயக்குநர் ஜேக்கப் ஆபிரகாம் கூறுகையில், "சோதனை அடிப்படையில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டோம். ஆனால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைப் பரவலாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் உற்பத்தியை முடுக்கிவிட்டுள்ளோம்" என்கிறார்.

பால்மா மக்கள் அமைப்பு

பால்மா மக்கள் அமைப்பின் நெறியாளர் அன்பையன் கூறுகையில், "எங்கள் குடும்பம் பனை சார்ந்த தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டதாகும். பனை மனிதர் காட்ஸன் சாமுவேல் அவர்களின் வழிகாட்டுதலில் பனை ஓலைகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

பால்மா அமைப்பு உருவாக்கியுள்ள பனையோலைத் தொட்டில்

அதன் தொடர்ச்சியாக தற்போது குழந்தைகளுக்கான பனையோலைத் தொட்டிலை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வளர்வதற்காக வாய்ப்பு உருவாகியுள்ளது. பனையோலையின் குளிர்ச்சி, மணம் ஆகியவை குழந்தைகளுக்கு நல்ல உறக்கத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

இந்த பனையோலைத் தொட்டில் கிட்டத்தட்ட 50 கிலோ எடையைத் தாங்கும் வல்லமை படைத்தது. மிக சாதாரணமான உபயோகத்தின் வாயிலாக ஐந்து ஆண்டுகள் வரை இதனை பயன்படுத்த முடியும். காலங்காலமாக அனைத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய விதத்தில் இந்த பனையோலைத் தொட்டிலை நாங்கள் முதன்முறையாக உருவாக்கியுள்ளோம்" என்றார்.

பனைமரங்களைக் காக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் சிறப்பு அறிவிப்பினை செய்திருந்த நிலையில், பால்மா மக்கள் அமைப்பின் இந்த முயற்சியும் பரவலாக தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் - ரூ. 3 கோடி மதிப்பில் பனை மேம்பாட்டு இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.