மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் கற்களை அகற்றி கருங்கற்கள் பதிக்கின்ற பணியை மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வுசெய்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சூழ்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றும்போது மக்கள் கருத்துகளை அறிய முடியாத நிலை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசு நிதி இரண்டாயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு இழந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகளின் கருத்துகளை கேட்க முடியாததால் பல்வேறு திட்டங்கள் தொழிநுட்ப குறைபாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?