மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஆஸ்டின்பட்டியில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில், ஆரம்பக்கட்டத்தில் 95 படுக்கைகளுடன் கூடிய கரோனா தனிமைப்படுத்தும் மையம் செயல்பட்டுவந்தது. கரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவி வருவதால், 247 படுக்கை வசதியுடன் கரோனா மையம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், அறிகுறியே இல்லாத நோயாளிகள், ஆரம்பக் கட்ட அறிகுறி உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு காசநோய் மருத்துவமனை கரோனா நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்துவருகிறது. கரோனா தீவிர சிகிச்சையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையொட்டி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் நிரப்பும் சிலிண்டர் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா வார்டில் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகளுக்கும் திரவ ஆக்சிஜன் இணைப்பு கொடுப்பதற்கு தேவையான குழாய் பொருத்தும் பணிகளும் மும்முரமாக நடந்துவருகிறது. இதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினை ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்