ETV Bharat / state

நில அளவீடு செய்ய விண்ணப்பித்தால் விரைவாக அளவீடு செய்ய உத்தரவு - நில அளவீடு

மதுரை: நில அளவீடு செய்வதற்கு விண்ணப்பம் செய்தால் விரைவாக அளவீடு செய்வதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
author img

By

Published : Oct 11, 2020, 3:24 AM IST

மதுரையைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நில அளவீடு குறித்தான மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கூறியதாவது, தற்போது டிஜிட்டல் உலகில் உள்ளோம். இதனால் நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி நில அளவீடு பணி மேற்கொள்ள வேண்டும்.
நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.
இந்தத் தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட அலுவலர்களின் சம்பளத்தில் ரூ. 2, 500 பிடித்தம் செய்ய வேண்டும். மேலும் அப்பணியை மேற்கொள்ள வேண்டிய அளவையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நில அளவீடு தொடர்பாக தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். அதில் மனு செய்யும் நபர், அளவீடு செய்ய வேண்டிய இடம், அளவீடு செய்யப்பட்ட தேதி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும். அந்த பதிவேட்டை உயர் அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
நில அளவீட்டு பணிக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் அரசு நிலம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டுபிடிக்கலாம். நில அளவீடு அல்லது மறு அளவீடு பணியை முழுமையாக புகைப்படம், வீடியோ பதிவு செய்ய வேண்டும். இதை சம்பந்தப்பட்டவர்கள் கட்டணம் செலுத்தி கேட்டால் வழங்கலாம்.

இந்த வழிகாட்டுதல்கள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை ஒரு மாதத்தில் தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும். சில நில அளவையர்கள் வருவாய்த்துறை அரசுக்கு வருவாய் குவிக்கும் துறையாக கருதாமல் தங்களுக்கு வருவாய் சேர்க்கும் துறையாக கருதி செயல்படுகின்றனர்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக இருந்தது. ஊழல் அலுவலர்களால் அந்த பெயருக்கு தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளது. மனுதாரர் நிலத்தை நியாயமான நில அளவையர் ஒருவரை நியமித்து அளவீடு செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.