ஈரோடு மாவட்டத்தைைச் சேர்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்றில் ஆன்லைன் மார்க்கெட் திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சுரேஷ் ரூ. 2.83 லட்சம் அருள்ராஜன் ரூ.7.5 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தனர். அதனால் அந்த நிறுவனத்தின் மீது இருவரும் காவல்துறையில் புகார் அளித்தனர்.
அந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் பிரவீன் குமார், விஸ்வநாதன் ஆகிய இருவரை கைது செய்தனர். அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பிணை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் வெளிநாட்டு பண சட்டத்தை மனுதாரர்கள் மீறியுள்ளனர்.
அது குறித்து அமலாக்கத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணத்தால் அமலாக்கத் துறையின் பதிலுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிணை மனுவை தள்ளுபடி செய்து வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: களப் பணியாளர்கள் பாதுகாப்புக்கு ரூ. 350.29 கோடி செலவு - அரசு தரப்பில் அறிக்கை