மதுரை: ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில், மாணிக்கம் என்ற பெயருடைய ஒரு வயது ஆண் குழந்தை ஜூன் 13ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அக்குழந்தை நேற்று (ஜூன்.29) பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கரோனா 3ஆவது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையில் அமெரிக்காவைத் தாண்டிய இந்தியா