ETV Bharat / state

தாயை கொலை செய்த கல்லூரி மாணவர் கைது - தாயை கொலை செய்த கல்லூரி மாணவர் கைது

மதுரை: தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

house
உயிரிழந்தவர் தங்கியிருந்த வீடு
author img

By

Published : Feb 2, 2021, 10:14 PM IST

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வஞ்சி மலர் (49). இவரது கணவர் சேகர். இவர்களுக்கு 19 வயதில் ஓம் சக்தி என்ற மகன் உள்ளார். கணவரை பிரிந்த வஞ்சி மலர், கடந்த 10 ஆண்டுகளாக மதுரை செல்லூர் பகுதியில் தன்னுடைய மகனுடன் வசித்து வருகிறார்.

வஞ்சி மலர் தனது ஆண் நண்பருடன் இரவு நேரங்களில் அடிக்கடி தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை கல்லூரி படிக்கும் மகன் ஓம்சக்தி பலமுறை கண்டித்துள்ளார். வஞ்சி மலர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மகன் நேற்று (பிப்.1) நள்ளிரவு தாய் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த அம்மிக்கல்லை அவரது தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மதுரை செல்லூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து ரத்தவெள்ளத்தில் வீட்டில் கிடந்த தாய் வஞ்சி மலரின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் விவசாயி கொலை: காவலர்கள் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.