மதுரை: தெப்பக்குளம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முனிச்சாலை பகுதியில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில், அப்பகுதியில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் பையுடன் நின்றிருந்த முருகானந்தம் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த தெப்பக்குளம் காவல் துறையினர், அவரிடமிருந்து 1,178 லாட்டரி சீட்டுகள், ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை