ETV Bharat / state

முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் மெகா கொழுக்கட்டை படையல்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Madurai Ganesh Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு, 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் மெகா கொழுக்கட்டை படையல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 5:31 PM IST

முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் மெகா கொழுக்கட்டை படையல்

மதுரை: இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்.18) இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டி தொட்டி எங்கும் விநாயகர் சிலைகளால் நிறைய, நாடு முழுவது விழாக்கோலம் பூண்டுள்ளது. தொடர்ந்து விநாயகர் கோயில்களில், காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு, 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜைகள் இன்று (செப்.18) நடைபெற்றது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்தனர்.

கி.பி .17ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் தெப்பக்குளத்தை உருவாக்கியபோது அதிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முக்குறுணி விநாயகர் உருவச்சிலை, மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில், தெற்குநோக்கிய பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முக்குறுணி விநாயகருக்கு, ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெகா கொழுக்கட்டை படையல் வைத்து வழிபாடு நடத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்காப்பு சார்த்தப்பட்டு, 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையும் படிங்க: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலம்!

தலா 6 படிகள் கொண்டது, ஒரு குறுணி எனப்படும் அளவையாகும். அதன்படி மூன்று குறுணிகளான 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை தயார் செய்து, அந்த விநாயகருக்கு படைக்கப்படுவதால், முக்குறுணி விநாயகராக அழைக்கப்படுகிறார். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புப் பூஜையில், மெகா கொழுக்கட்டை படையலை சிவாச்சாரியார்கள் தூக்கிவந்து படைத்தனர். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, மதுரை நகரில் சிறப்பு பெற்ற மேலமாசி - வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலகால விநாயகர், ரயில்வே காலனி சித்தி விநாயகர், காமராஜர் சாலையில் உள்ள அரசமரத்தடி விநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோயில்களிலும் இன்று வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி 2023: கொழுக்கட்டைக்கு பதிலாக கணேசா லட்டு.. தனியார் பேக்கரியின் புது ட்ரிக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.