கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள நெட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மகுமாரி. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2013ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார். இதுகுறித்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீஸாரிடம் புகாரளித்தனர்.
பின்னர், மதுரையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தால் பத்மகுமாரி பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் மற்றும் ஆய்வாளர் தாஹிரா ஆகியோரின் முயற்சியால் நேற்று அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் மதுரை கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் நரசிம்மவர்மன் முன்னிலையில் மகள் ஸ்ரீலதா மற்றும் உறவினர்களிடம் பத்மகுமாரி ஒப்படைக்கப்பட்டார்.
6 ஆண்டுகளுக்கு முன்னால் கேரளாவில் காணாமல் போன மூதாட்டி, மதுரையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.