தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வருவாய்த் துறைக்குச் சொந்தமான ஒரு ரேஷன் கடையில் அரிசி மூட்டைகளை ஆம்னி வேனில் கடத்துவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.
இந்த வீடியோ காட்சி பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். அதனடிப்படையில், மதுரை கூட்டுறவு பண்டகசாலை பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது, மதுரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர், கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரண அரிசி கடத்தல் - வைரல் வீடியோ