மதுரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த கார்த்திகா என்பவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியரின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகாவிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கார்த்திகா, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திலகர் திடல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
லஞ்சப் புகார் காரணமாக தனது வேலை பறிபோய்விடுமோ என்னும் அச்சத்தில் கார்த்திகா இந்த முடிவை மேற்கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கடன் தொல்லையால் 5 மாத பச்சிளம் குழந்தையுடன் தாய் தற்கொலை!