இலங்கையில் குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் 6 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. இதில் ஆறு பேரில் மூன்று பேர் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று காலை அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடை ஹபிபுல்லா, வின்சென்ட் ரோடு உசேன் ஆகிய மூவரும் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களுடன் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சதக் அப்துல்லா தொடர்பு வைத்திருந்தாக தகவல் கிடைத்தது. இதையடுத்து என்ஐஏ மதுரைக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றது.