ETV Bharat / state

தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் மூலமாக ரூ.2 கோடி லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்கள்! - water board

மதுரை: நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் மூலமாக பொதுமக்களிடமிருந்து சராசரியாக ரூ.2 கோடியை தண்ணீர் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் லாபமாக ஈட்டுவதாகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெறும் ரூ.10 ஆயிரம் லாபத்தில் மக்களுக்கு சேவை செய்வதாகவும் ஏஐடியூசி-யின் மாநில கௌரவத் தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.

ராஜன்
author img

By

Published : May 8, 2019, 3:06 PM IST

ஈடிவி பாரத் செய்திகளுக்காக ராஜன் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

மக்களுக்குத் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதற்காக, தமிழ்நாட்டில் 1971ஆம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது. 540-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் மூலமாக 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தினமும் 1800 மில்லியன் கேன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது நிதி பற்றாக்குறையை காரணம்காட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை மூடுவதற்கு அரசு முயற்சித்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த வாரியத்தில் 4 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. இதன் பல்வேறு பிரிவுகளில் சராசரியாக 60 சதவிகிதப் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு குடிநீர் தொய்வின்றி வழங்க வேண்டுமெனில், இந்த வாரியத்தை வலுப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் சென்டேஜ் என்று சொல்லப்படுகின்ற திட்டப்பணிகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை ஊழியர்களின் ஊதியம், அலுவலகப் பணிகளுக்கு எடுத்துக் கொள்வதன் மூலமாக நிறுவன செலவு ஈடுகட்டப்பட்டு வந்தது. தொடக்கத்தில் 15 சதவிகிதமாக இருந்த சென்டேஜ் தற்போது 5 சதவிகிதமாக குறைத்ததே வாரியத்தின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

இந்த வாரியத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.400 கோடி வரை ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது. வாரியத்தை காப்பாற்ற தமிழக அரசு தனது பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது பணியிலுள்ள பெரும்பாலானோர் கடுமையான பணிச் சுமையினாலும், மன உளைச்சலினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குடிநீர்த் திட்டங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

கடந்த 1971-லிருந்து 2002 வரை ஏறக்குறைய 31 ஆண்டுகள் வெறும் ஒரு பைசாவுக்கு கிராமப்புற மக்களுக்கு 3 லிட்டர் தண்ணீரும் நகர்ப்புற மக்களுக்கு 4 லிட்டர் தண்ணீரும் வழங்கியது. கடந்த 2002-லிருந்து 2018-ஆம் ஆண்டு வரை அதே ஒரு பைசாவுக்கு கிராமப்புறங்களுக்கு 3 லிட்டரும், நகர்ப்புறங்களுக்கு 2 லிட்டரும் வழங்கி வருகிறது. கடந்த 2018-லிருந்து ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிராமப்புறங்களுக்கு ரூ.7-ம், நகர்ப்புறங்களுக்கு ரூ.9-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழக அரசு அம்மா குடிநீர் என்று 1 லிட்டர் தண்ணீரை ரூ.10-க்கு விற்பனை செய்கிறது. இதே அளவு தண்ணீரை மத்திய அரசு ரயில்வே நிலையங்கள் ரூ.15-க்கும், தனியார் நிறுவனங்கள் ரூ.20-லிருந்து ரூ.22 வரை விற்பனை செய்து வருகின்றன.

நியாயமாக தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய லாபம் எல்லாம் தனியார் நிறுவனங்களின் தண்ணீர் வேட்டைக்குச் சென்றுவிட்டால், எப்படி நிறுவனம் லாபமீட்ட முடியும்? ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இந்த பொதுத்துறை நிறுவனத்தை முடக்கி வருகிறார்கள். தற்போது வாரியம் சந்தித்து வரும் நிதிச்சுமையை அரசு ஏற்றுக்கொண்டால் தமிழகம் முழுவதும் தண்ணீரை இலவசமாகவே வழங்க முடியும். அந்த அளவிற்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும், மனித உழைப்பையும் கொண்டுள்ளது.

ராஜன் பேட்டி

தற்போதுள்ள சூழலில் மிக நியாயமான விலையை நிர்ணயித்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பை வாரியத்திற்கு வழங்கினால், அதில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்படுவதுடன், தமிழக அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. இதனை உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டும் என்பதே ஊழியர்களின் வேண்டுகோள், என்றார்.

Intro:Body:

நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் மூலமாக ரூ.2 கோடி லாபமீட்டும் தண்ணீர் நிறுவனங்கள் - நீரியல் வல்லுநர் குற்றச்சாட்டு

'ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் மூலமாக பொதுமக்களிடமிருந்து சராசரியாக ரூ.2 கோடியை தண்ணீர் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் லாபமாக ஈட்டுகின்றன. ஆனால் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெறும் ரூ.10 ஆயிரம் லாபத்தில் மக்களுக்கு சேவை செய்கிறது' என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஏஐடியூசி-யின் மாநில கௌரவத் தலைவர் கே.கே.என்.ராஜன் என பேட்டி.

ஈடிவி பாரத் ஊடகத்திற்காக பிரத்யேக பேட்டி அளித்த கே.கே.என்.ராஜன் மேலும் கூறுகையில், 'சென்னை பெருநகரம் நீங்கலாக, கடந்த 1971-ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவக்கப்பட்டது. 540-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் வாயிலாக ஏறக்குறைய 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தண்ணீர் சேவை தற்போது வரை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. நாளென்றுக்கு 1800 மில்லியன் கேலன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் எனும் மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை நிதிப்பற்றாக்குறை என்ற காரணத்தைக் காட்டி மூடுவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தற்போது. இந்நிறுவனத்தில் மட்டும் சற்றேறக்குறைய 4 ஆயிரம் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. இதன் பல்வேறு பிரிவுகளில் சராசரியாக 60 சதவிகிதப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தரமான குடிநீர் தொடர்ந்து தொய்வின்றி வழங்கப்பட வேண்டுமானால், இப்பொதுத்துறை நிறுவனம் வலுப்படுத்தப்பட வேண்டும். சென்டேஜ் என்று சொல்லப்படுகின்ற திட்டப்பணிகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஊழியர்களின் ஊதியம், அலுவலகப் பணிகளுக்கு எடுத்துக் கொள்வதன் மூலமாக நிறுவன செலவு ஈடுகட்டப்பட்டு வந்தது. தொடக்கத்தில் 15 சதவிகிதமாக இருந்த சென்டேஜ் தற்போது 5 சதவிகிதமாக குறைத்ததே நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஏறக்குறைய ரூ.400 கோடி வரை ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் இதுவரை தரப்படவில்லை. இந்நிறுவனத்தைக் காப்பாற்ற தமிழக அரசு தனது பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது பணியிலுள்ள பெரும்பாலானோர் கடுமையான பணிச் சுமையினாலும், மன உளைச்சலினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குடிநீர்த் திட்டங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

கடந்த 1971-லிருந்து 2002 வரை ஏறக்குறைய 31 ஆண்டுகள் வெறும் ஒரு பைசாவுக்கு கிராமப்புற மக்களுக்கு 3 லிட்டர் தண்ணீரும் நகர்ப்புற மக்களுக்கு 4 லிட்டர் தண்ணீரும் த.கு.வ.வாரியம் வழங்கியது. கடந்த 2002-லிருந்து 2018-ஆம் ஆண்டு வரை அதே ஒரு பைசாவுக்கு கிராமப்புற மக்களுக்கு 3 லிட்டரும், நகர்ப்புற மக்களுக்கு 2 லிட்டரும் வழங்கி வருகிறது. கடந்த 2018-லிருந்து ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிராமப்புறங்களுக்கு ரூ.7-ம், நகர்ப்புறங்களுக்கு ரூ.9-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழக அரசு அம்மா குடிநீர் என்று 1 லிட்டர் தண்ணீரை ரூ.10-க்கு விற்பனை செய்கிறது. இதே அளவு தண்ணீரை மத்திய அரசு ரயில்வே நிலையங்கள் ரூ.15-க்கும், தனியார் நிறுவனங்கள் ரூ.20-லிருந்து ரூ.22 வரை விற்பனை செய்து வருகின்றன.

நியாயமாக த.கு.வ.வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய லாபம் எல்லாம் தனியார் நிறுவனங்களின் தண்ணீர் வேட்டைக்குச் சென்றுவிட்டால், எப்படி நிறுவனம் லாபமீட்ட முடியும்? ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இந்த பொதுத்துறை நிறுவனத்தை முடக்கி வருகிறார்கள். தற்போது த.கு.வ.வாரியம் சந்தித்து வரும் நிதிச்சுமையை அரசு ஏற்றுக்கொண்டால் தமிழகம் முழுவதும் தண்ணீரை இலவசமாகவே வழங்க முடியும். அந்த அளவிற்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும், மனித உழைப்பையும் கொண்டுள்ளது இந்நிறுவனம்.

தற்போதுள்ள சூழலில் மிக நியாயமான விலையை நிர்ணயித்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பை த.கு.வ.வாரியத்திற்கு வழங்கினால், அதில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்படுவதுடன், தமிழக அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. இதனை உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்' என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.