ETV Bharat / state

Female infanticide: உசிலம்பட்டியில் பெண் சிசுக் கொலை? - உசிலம்பட்டியில் பெண் சிசுக் கொலையா

Female infanticide: உசிலம்பட்டி அருகே பெண் சிசு உயிரிழந்த சம்பவத்தில் புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யப்படுகிறது.

பெண் சிசுக் கொலையா?
பெண் சிசுக் கொலையா?
author img

By

Published : Dec 30, 2021, 3:41 PM IST

Female infanticide: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பெரியகட்டளை கிராமம். இவ்வூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதிக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை கடந்த 26ஆம் தேதி உயிரிழந்தாக வீட்டின் அருகிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் பெண் சிசு கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரிக்கச் சென்றனர். அப்போது பெற்றோர் தலைமறைவாகினர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்ந்து சந்தேகம் நீடிக்கும் சூழலில் இன்று (டிசம்பர் 30) மதுரை மாவட்ட காவல் கூடுதல் காண்காணிப்பாளர் சந்திரமௌலி, சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயா ஆகியோர் முன்னிலையில் மருத்துவக் குழுவினர் பெண் சிசு புதைக்கப்பட்ட இடத்தில் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: வேலூரில் அதிகரித்துவரும் கரோனா தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.