வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி அதிகாரிகள் நுழைந்து ஆவணங்களை எடுத்துசென்ற விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலராக இருந்த நடராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியாக ச.நாகராஜன் இன்று(ஏப்.28) பொறுப்பு ஏற்று கொண்டார். மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்று கொண்ட பின் நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, இந்திய தேர்தல் ஆணைய பரிந்துரைபடி நான் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருப்பரங்குன்றம் தொகுதியில் 9 பறக்கும்படையினர் உள்ள நிலையில் கூடுதலாக பறக்கும் படையினர் நியமிக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.