ETV Bharat / state

'3200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன' - தமிழக அரசு தகவல் - tn gvt

மதுரை: தமிழ்நாட்டில் 3200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

mdu
author img

By

Published : Jul 9, 2019, 10:54 PM IST

Updated : Jul 10, 2019, 8:12 AM IST

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலர் ஆனந்தவல்லி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'தமிழ்நாட்டில் உட்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அரசு பள்ளிகள் உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதமும் அதிகரித்துள்ளது.

பருவம் எய்திய பள்ளி மாணவிகள், மாதவிடாய் காலத்தில் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும். பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை வைக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 5588 அரசுப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 3200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

பிற பள்ளிகளில் நாப்கின்கள் பொறுப்பாசிரியர் ஒருவரால் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. 2011-12 ஆம் ஆண்டிலேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் கீழ் வளரிளம் மாணவி ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று பாக்கெட் நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. இதைத் தவிர, அங்கன்வாடி பணியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் மூலமாகவும் பள்ளி செல்லாத வளரிளம் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கப்படுகின்றன.

மீதமுள்ள 2 ஆயிரத்து 388 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே கூடுதல் கால அவகாசம் வழங்க வெண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Intro:தமிழகத்தில் 3200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள 5588 அரசுப்பள்ளிகளில் 3200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது- பள்ளிக்கல்வித்துறை செயலர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில் மனு.
மீதமுள்ள 2388 பள்ளிகளில் நாப்கின் வழங்கும்  இயந்திரங்களை வைக்க கூடுதல் கால அவகாசம் வழங்க கோரிக்கை.
Body:தமிழகத்தில் 3200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள 5588 அரசுப்பள்ளிகளில் 3200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது- பள்ளிக்கல்வித்துறை செயலர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில் மனு.
மீதமுள்ள 2388 பள்ளிகளில் நாப்கின் வழங்கும்  இயந்திரங்களை வைக்க கூடுதல் கால அவகாசம் வழங்க கோரிக்கை.

உயர்நீதின்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலர் ஆனந்தவல்லி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'தமிழகத்தில் உட்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அரசு பள்ளிகள் உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் சதவீதம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவிதமும் அதிகரித்துள்ளது. பருவம் எய்திய பள்ளி மாணவிகள், மாதவிடாய் காலத்தில் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.இதை தவிர்க்கும் வகையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும்.

மேலும் பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை வைக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்  என மொத்தம் 5588 அரசுப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 3200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
பிற பள்ளிகளில் நாப்கின்கள் பொறுப்பாசிரியர் ஒருவரால் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. 2011-12 ஆம் ஆண்டிலேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் கீழ் வளரிளம் மாணவி ஒருவருக்கு  2 மாதங்களுக்கு ஒருமுறை 3 பாக்கெட் நாப்கின்கள் வழங்கப்படுகின்றன.  இதைத் தவிர, அங்கன்வாடி பணியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் மூலமாகவும் பள்ளி செல்லாத வளரிளம் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கப்படுகின்றன.

ஆகவே, மீதமுள்ள  2388 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே கூடுதல் கால அவகாசம் வழங்க வெண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.Conclusion:
Last Updated : Jul 10, 2019, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.