விருதுநகர், ராஜபாளையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இக்கொலையில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இக்கொலைக்கும் தொடர்புள்ளதாக தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி சர்சையை கிளப்பியது.
இதனால், அவர்மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வழக்கு இன்னும் முடியவில்லை.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலஜிக்கு நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் முத்துபாண்டியன், அவருக்கு நெருக்கமானவர் எனக்கூறி வேறு வழக்கறிஞரை நியமிக்குமாறு கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் சிவா சுப்புரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை அவர்கள், இவ்வழக்கு விசாரணை இன்னும் தொடங்காத நிலையில் அரசு வழக்கறிஞரை மாற்ற இயலாது.மேலும் வழக்கில் அரசு வழக்கறிஞருடன் மனுதாரரின் வழக்கறிஞரையும் நியமித்து, வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:
திருவாடுதுறை ஆதீன நிலங்கள் மீட்பு வழக்கு - மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!