ETV Bharat / state

'திமுக-காங்கிரஸ் கட்சிகள் இந்தியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றன' - முரளிதர ராவ் குற்றச்சாட்டு - Muralidhar Rao slams Stalin

மதுரை: திமுக-காங்கிரஸ் கட்சியினர் இந்தியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த ஆர்வம் காட்டாமல், பிரிவினையை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

muralidhar-rao-slams-stalin-over-kashmir-issue
author img

By

Published : Sep 21, 2019, 7:37 PM IST

மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் சிறப்புச் சட்டம் ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பாக 400க்கும் அதிகமான பிரச்சார விளக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இது தொடர்பாக தவறான அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், இதன் உண்மை நிலையை உணர்த்தவே இந்த விளக்கப் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

திமுக-காங்கிரஸ் கட்சியினர் இந்தியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த ஆர்வம் காட்டாமல், பிரிவை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர் என்றும் அறிஞர் அண்ணா பொறுப்பில் இருந்த போது தேசிய ஒற்றுமைக்காக குரல் கொடுத்தார் என்றும் சுட்டிக்காட்டினார். தற்காலிகமான ஒரு சட்டத்தை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிப்பது நெறிகளுக்கு எதிரானது இல்லையா? என்று கேள்வியெழுப்பிய அவர், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் சமூக நீதிக்காக போராடுவதாக கூறி ஏமாற்றுகின்றனர் என்று சாடினார். சமூக நீதிக்காக போராடுவதாக கூறும் ஸ்டாலின், காஷ்மீரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை என்பதை மட்டும் எவ்வாறு ஏற்கிறீர்கள்? இது அநீதிக்கு எதிரானது இல்லையா? என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.

காஷ்மீரிலிருக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டாமா? இது பட்டியலினத்தவர்களுக்கும் அவர்களின் சமுக நீதிக்கும் எதிரானது இல்லையா? பின் ஏன் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? என்றார்.

காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இது தொடர்பாக விவாதிக்கத் தயார் என்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காஷ்மீரின் வரலாறு குறித்து ஸ்டாலின் பயில வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஏமன், குவைத் போன்ற நாடுகள் பாகிஸ்தான் பிரதமரை மோடியுடன் கலந்தாலோசிக்க சொல்லும் நிலையில் ஸ்டாலினும், ராகுலும் பாகிஸ்தான் பிரதமர் போல பேசிவருவதாகவும் முரளிதர ராவ் சாடினார்.

தமிழ் மிகவும் பழமையான மொழி எனவும் தமிழ் இந்தியாவின் சிறப்புகளில் ஒன்று எனவும் பிரதமர் மோடி தமிழ் குறித்து உயர்வாகவே பேசியுள்ளார் என்று குறிப்பிட்ட அவர், கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் யாருடைய வற்புறுத்தலும் இன்றி, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் இந்தியைக் கற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த அடிப்படைப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்வு குறித்த முடிவுகளை எடுக்க கால தாமதம் இல்லை எனவும் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க...

'வெங்காய விலை உயர்வு; இடைத்தேர்தலில் பதில் கிடைக்கும்' - ஸ்டாலின்

Intro:பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்மு முரளிதர ராவ் மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.Body:கடந்த சில ஆண்டுகளாக மக்கள் யாருடைய வற்புறுத்தலுமின்றி, வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளும் நோக்கில், ஹிந்தியைக் கற்றுக்கொள்வதாக மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் பேட்டி....நாங்குநேரி, வீக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து முடிவெடுக்கப்படும் எனவும் பேட்டி.....

மதுரையில் பாண்டிகோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்... அப்போது

காஷ்மீர் சிறப்புச்சட்டம் ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அது தொடர்பாக 400 க்கும் அதிகமான பிரச்சார விளக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் இது தொடர்பாக தவறான, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பி வருகின்றனர். அதனை அகற்றி உண்மை நிலையை உரைக்கவே இந்த விளக்கப்பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது

திமுக, காங்கிரஸ் கட்சியினர் இந்தியர்கள் ஒற்றுமையை உருவாக்க ஆர்வம் காட்டாமல், பிரிவுகளை உண்டாக்க முயன்று வருகின்றனர்.

அறிஞர் அண்ணா பொறுப்பில் இருந்த போது தேசிய ஒற்றுமைக்காக குரல் கொடுத்தார்.

நாங்கள் இன்று நினைப்பதை அண்ணா அன்று சொன்னார்

கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காஷ்மீர் சிறப்புச்சட்டம் ர்த்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீர் சிறப்பு சட்டம் தற்காலிகமானது என்பதை ஜவஹர்லால் நேரு எவ்வாறு ஏற்றார்? என
ஸ்டாலின், ராகுல் காந்திக்கு கேள்வி

தற்காலிகமான ஒரு சட்டத்தை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிப்பது நெறிகளுக்கு எதிரானது இல்லையா? எனவும் கேள்வி

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் சமூக நீதிக்காக போராடுவதாக கூறுகின்றனர். பல புரட்சிகளை செய்ததாக கூறுகின்றனர். ஸ்டாலினைக் கேட்கிறேன், காஷ்மீரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை என்பதை மட்டும் எவ்வாறு ஏற்கிறீர்கள்? இது அநீதிக்கு எதிரானது இல்லையா?

காஷ்மீரிலிருக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டாமா? இது தலித்துக்களுக்கும், அவர்களின் சமுக நீதிக்கும் எதிரானது இல்லையா? பின் ஏன் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?

பல இடங்களிலும் பெண்களுக்கு எதிராக பிரச்சனைகளில் குரல் கொடுப்பவர்கள்,
கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரிலிருக்கும் பெண்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? என
கனிமொழி, பிருந்தா கார்த் ஆகியோருக்கு கேள்வி

காஷ்மீரிலிருக்கும் பெண்களுக்கான பாலின சமுத்துவத்திற்காக ஏன் குரல் கொடுக்கவில்லை.

காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இது தொடர்பாக விவாதிக்க தயார்

இந்த சிறப்புப் சட்டத்தை ரத்து செய்ய பாஜக மட்டுமல்லாமல் பிற கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன

சிறப்புச் சட்டப்பிரிவு தேவையெனில் பெண்களின் பாலின சமத்துவம், தலித்துக்களின் இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுகிறார்கள்

சுதந்திரத்திற்கு பின்னான காஷ்மீரின் வரலாறு குறித்து ஸ்டாலின் பயிலவேண்டும்

காஷ்மீரில் இயல்பு நிலையே உள்ளது. எந்த வன்முறையும் அரசின் திட்டமிட்ட நடைமுறையால் நிகழவில்லை

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் பிரிக்கப்பட்டதுபோல் காஷ்மீரும் பிரிக்கப்பட்டது. அது ல்டாக் மக்களின் நீண்டநாள் கோரிக்கை

முன்னேற்றத்திற்காக பிரிக்கப்பட்டது. அது நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

ஏமன், குவைத் போன்ற நாடுகள் பாகிஸ்தான் பிரதமரை மோடியுடன் கலந்தாலோசிக்க சொல்லும் நிலையில் ஸ்டாலினும், ராகுலும் பாகிஸ்தான் பிரதமர் போல பேசுகிறார்கள்

70 ஆண்டுகளாக பல மாநில மொழிகளும் அழியாமல் 370 சிறப்புச்சட்டமின்றி பாதுகாக்கப்படவில்லையா?

அவ்வாறிருக்கையில், காஷ்மீரில் மட்டும் 370 தேவைப்படுவதன் காரணமென்ன

*தமிழ் மிகவும் பழமையான மொழி எனவும் தமிழ் இந்தியாவின் சிறப்புகளில் ஒன்று எனவும் பிரதமர் மோடி தமிழ் குறித்து உயர்வாகவே பேசியுள்ளார்*

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழர்கள் அமெரிக்க உட்பட பல நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இது பெருமைப்பட வேண்டிய ஒன்று

*நாங்குநேரி, வீக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து முடிவெடுக்கப்படும்*

தமிழக பாஜக தலைவர் தேர்வு குறித்து முடிவுகளை எடுக்க கால தாமதம் இல்லை.

தேசிய தலைவர்களுடன் இணைந்து. கலந்தாலோசித்து, தமிழக பாஜக தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் எப்போது வேண்டுமானாலும் நாளை கூட தேர்வு செய்யப்படலாம்

கடந்த சில ஆண்டுகளாக மக்கள் யாருடைய வற்புறுத்தலுமின்றி, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.