மதுரை: விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில். 35-வது ஆண்டுவிழா நடைபெற்றது. இதற்காக 470 ஆடுகளை வெட்டி நேற்று(மே20) இரவு முழுவதும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டி சுவாமிக்கு ஆடுகளை பலியிடுவதாக வேண்டிக் கொள்கின்றனர். முனியாண்டி கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கே கறிவிருந்து நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய ஆடுகளை இரவு முழுவதும் வெட்டி சமைத்து காலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்தத் திருவிழாவில் நேற்று(மே20) காலை கிடாவுடன் பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முனியான்டி கோவிலுக்கு முன்பு ஆட்டுகிடாய்கள் வெட்டப்பட்டன.
விழாவில் பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம், காரியபட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள ஊர்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். முனியாண்டி கோவில் வேண்டிக்கொண்டால் தாங்கள் நினைத்தது நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:இன்னைக்கு ஒரு பிடி... மதுரையில் நடந்த விநோத கறி விருந்து விழா