ETV Bharat / state

"முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - கேரளா ஒத்துழைப்பு மறுப்பு" - கேரளா ஒத்துழைப்பு மறுப்பு

முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் கேரள அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. கேரள அரசின் தடை மனப்பான்மையால்,அணையை மேலும் பலப்படுத்தும் பணியை தொடங்க முடியவில்லை என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"முல்லைப் பெரியாறு அணை விவகாரம்- கேரளா ஒத்துழைப்பு மறுப்பு"

author img

By

Published : Oct 29, 2022, 7:32 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "07.05.2014 - ல் நீதிமன்றம் பெரியாறு அணையில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை 2 பலப்படுத்தியபின் முழுக் கொள்ளலவான 152 அடி நீர்தேக்கி கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்குகிறது.

எனவே, "முல்லைப் பெரியாறு அணையில்" இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொண்டுவர உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு பொதுபணிதுறை கூடுதல் தலைமை செயலாளர், சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அணை பலவீனமாக உள்ளது என்று நாளிதழ்களில் கேரளாவில் இருந்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இதன் விளைவாக, மத்திய நீர் வள குழு தலைவர் தலைமையிலான குழு நவம்பர், 1979-இல் அணையை ஆய்வு செய்தது, பின்னர் தலைவர் அணை பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்.

இருப்பினும் அணையை நவீன தரத்திற்கு கொண்டு வருவதற்காக அணையை பலப்படுத்த அறிவுறுத்தினார். பின்வரும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் காண்போம்.

  • அவசர நடவடிக்கைகள்.
  • அணையின் மேற்புறத்தில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கொண்டு மூடுதல்.
  • கூடுதல் கசிவுப் பாதையை உருவாக்குதல்.
  • நடுத்தர கால நடவடிக்கைகள்
  • அணையின் கேபிளை வலுப்படுத்துதல்.
  • நீண்ட கால நடவடிக்கைகள்.
  • தற்போதுள்ள அணையிலிருந்து நியாயமான தூரத்தில் ஒரு புதிய அணையை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.
  • அணையின் பின்புறத்தில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கொண்டு ஆதாரம் ஏற்படுத்துதல்.
  • வண்டிப்பெரியார் - பம்பாவிலிருந்து அணையின் கீழ்நோக்கிச் செல்லும் குறுகிய பாதையில் ஒரு அணுகு சாலையை ஏற்படுத்துதல்.

புதிய அணை கட்டுவதற்கான முன்மொழிவு பின்னர் சாத்தியமற்றதாகக் கண்டறியப்பட்டது. மற்றும் கைவிடப்பட்டது. மற்றும் ஏற்கனவே உள்ள அணையை பலப்படுத்துவது தொடர்ந்தது. அணையின் நீர்மட்டத்தை வலுப்படுத்துவதற்கு வசதியாக அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

"முல்லைப் பெரியாறு அணையானது" 1980-1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பலப்படுத்தப்பட்டு நவீன தரத்திற்கு கொண்டு வரப்பட்டு புதிய அணை போல் சிறப்பாக உள்ளது. 1994-ல் வலுப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகு , தமிழ்நாடு நீர்மட்டத்தை மீட்டெடுக்க விரும்பியது. இருப்பினும், கேரள அரசு ஒத்துழைக்க வில்லை.

08.04.2022 அன்று, உச்ச நீதிமன்றம் சில மனுக்கள் மீது இடைக்காலத் தீர்ப்பை அளித்து, "முல்லைப் பெரியாறு அணையின்" மேற்பார்வைக் குழுவை வலுப்படுத்துமாறு உத்தரவிட்டு, தமிழ்நாடு, கேரளா அரசின் தலா ஒருவர் என இரண்டு தொழில்நுட்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டது.

மேலும் , அணைப் பாதுகாப்புச் சட்டம் 2021-இன் கீழ் , தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரங்களைக் குழு முழுமையாகச் செயல்படும் வரை அளிக்கப்பட்டது. ஏதேனும் குறைகள் இருப்பின், குழுவை அணுகலாம் என்றும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் விரைவில் இந்த வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லை பெரியாறு அணையில் 50 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைத்தால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என்று மனுதாரர் கூறியிருப்பது சரி இல்லை என்றும். "முல்லைப் பெரியாறு அணையின்" நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு மாறாமல் உள்ளது.

அணையின் நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையைப் பொறுத்து மட்டுமே ஆண்டு தோறும் பெறும் நீரின் அளவு மாறுபடும். எனவே, ஏற்கனவே உருவாக்கப்பட்ட சேமிப்பிடத்தை குறைக்க வேண்டாம் என்றும், உருவாக்கப்பட்ட சேமிப்பக திறனை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் வைகை அணையில் இருந்து உபரியாக நீர் வெளியேறுகிறது. "முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் திறனை 152 அடியாக உயர்த்த வேண்டும்". முல்லை பெரியாறு அணையின் சேமிப்புதிறனை அதிகரிக்கவும், பற்றாக்குறை உள்ள வைகைப் படுகையில் நீரை சிறப்பாக நிர்வகிக்கவும் பயன்படுத்தவும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவை மற்றும் பிற துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

எனவே, "முல்லை பெரியாறு" அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் கேரள அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. ஆனால், "கேரள அரசின் தடை மனப்பான்மையால், வனத்துறை அனுமதிக்காததால், இது வரை அணையை மேலும் பலப்படுத்தும் பணியை தொடங்க முடியவில்லை". எனவே, இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 01.03.2017 அன்று மனு தாக்கல், செய்யப்பட்டது.

"முல்லைப் பெரியாறு" அணையின் பேபி அணையின் கீழ்பகுதியில் அமைந்துள்ள 23 மரங்களை வெட்டுவதற்குத் தேவையான அனுமதியை கேரள மாநில அரசும் , அதன் வனத்துறைக்கும் உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு வனப்பகுதியில் பெய்யும் மழை அளவை கண்காணிக்க நிலையத்தில் உள்ள வாராந்திர அட்டவணையை மாற்றவும், தரவுகளை சேகரிக்கவும் கேரள அரசு இடையூறு விளைவிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்.

"முல்லை பெரியாறு அணையில்" எஞ்சிய பலப்படுத்தும் பணிகள், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள தேவையான இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு செல்வதற்கு எந்த வகையிலும் தடை விதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த பொது நல மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இதையும் படிங்க:தீபாவளி பண்டிக்கைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை : ஆவின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.