ETV Bharat / state

மதுரையில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

மதுரை உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரையில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
மதுரையில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
author img

By

Published : Nov 10, 2022, 3:20 PM IST

Updated : Nov 10, 2022, 9:17 PM IST

மதுரை அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வரும் அனுசியா வெள்ளையப்பன் என்பவருக்கு சொந்தமாக VBM என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த வெடி விபத்தில் ஐந்து பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆலையின் முதல் பிளாக்கில் வெடி விபத்து ஏற்பட்டு பின்னர் இரண்டாவது பிளாகிலும் பரவியுள்ளது. இதனால் இறந்தவர்கள் அடையாளம் கண்டுபிடிக்க சிறிது நேரம் ஆனது. தற்போது இந்த வெடி விபத்தில் உயிரிழந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதில். அழகு சிறையை சேர்ந்த ரகுபதி கொண்டம்மாள், வடக்கம்பட்டியைச் சேர்ந்த வல்லரசு, விக்கி, கழுகு பட்டியை சேர்ந்த அம்மாசி, கோபி என்பது தெரியவந்துள்ளது.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அங்கம்மாள், கருப்பசாமி, நாகலட்சுமி, மகாலட்சுமி, ஜெயபாண்டி, பச்சையக்காள், கருப்பசாமி, அன்னலட்சுமி, மாயத்தேவர், பாண்டியம்மாள், பேச்சியம்மாள் உள்ளிட்ட 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தானது மதிய உணவு இடைவேளையில் நிகழ்ந்ததால் உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கட்டிட இடுப்பாடுகளில் யாரேனும் சிக்கி உயிரிழந்தனரா என்பது குறித்து தொடர்ந்து ஜேசிபி வாகனம் மூலம் வீட்டு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுரையில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

வெடி விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்ற அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Last Updated : Nov 10, 2022, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.