மதுரை முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வீரவேல். இவர் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார்.
நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, காற்று வரவில்லை என்பதற்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் அந்தப் பகுதியை நோட்டமிட்ட இருவர் திடீரென வீரவேல் வீட்டிற்குள் புகுந்து வீட்டிலிருந்த விலை உயர்ந்த 2 போன்கள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த வீரவேல் செல்போன்கள், பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து தனது வீட்டின் எதிரே இருக்கக்கூடிய சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்துள்ளார். அதில், நள்ளிரவில் வந்த இருவர் அவரின் வீட்டிற்குள் புகுந்து பொருள்களை எடுத்துக் கொண்டு ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
தொடர்ந்து வீரவேல் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள்: வைரலாகும் சிசிடிவி காட்சி!