மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சரவணன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். அதில், ”குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் நீர் நிலைகள் முறையாக தூர்வார வேண்டும்.
நீர் நிலைகள் மட்டுமல்லாமல் வரத்து கால்வாய், மதகுகளை சீரமைக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வாரும்பொழுது அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மணல் எடுக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரவணன், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணியில் பல நீர் நிலைகளில் ஏழு அடி வரை வண்டல் மண் அனுமதியின்றி எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.