ETV Bharat / state

ஓபிஎஸ் போன்று நடித்துக் காட்டிய ஸ்டாலின்; தேர்தல் பரப்புரையில் ருசிகரம்! - Stalin

மதுரை: தேர்தல் பரப்புரையின்போது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் போன்று மு.க ஸ்டாலின் நடித்துக்காட்டியது தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஸ்டாலின்
author img

By

Published : May 5, 2019, 2:26 AM IST

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது. ’'கருணாநிதி இறந்தபோது அண்ணா சமாதி அருகே அவருக்கு 6 அடி நிலம் தருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்தார். அதை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து கருணாநிதிக்கு சமாதி அமைத்தோம் என உருக்கமாகக் கூறினார்.

ஓபிஎஸ் போன்று நடித்துக்காட்டிய ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ்தான் கூறினார். தனது முதலமைச்சர் பதவிக்கு வேட்டு வந்துவிட்டது என்பதை அறிந்து, திடீரென ஜெ.வின் சமாதிக்குச் சென்ற 40 நிமிடம் தியானம் மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அம்மாவின் ஆவியோடு பேசியதாகக் கூறினார்’ என ஓபிஎஸ் தியானம் செய்ததை நடித்துக் காட்டி ஸ்டாலின் கிண்டல் செய்தார். அவது நக்கல் பேச்சால் பரப்புரைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் எழுந்த சிரிப்பலை ஓய சிறிது நேரம் எடுத்துக் கொண்டது.

ஓபிஎஸ் போன்று நடித்து கைதட்டல் வாங்கிய மு.க.ஸ்டாலின் - மதுரை பரப்புரையில் ருசிகரம்

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது, துணை முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்ததைக் கிண்டல் செய்ததுடன் அதே போன்று நடித்தும் காட்டி கைதட்டல் வாங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களம் தலைவர்களின் பரப்புரையால் தற்போது சூடு பிடித்திருக்கும் நிலையில், நேற்றும், இன்றும் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அத்தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஓட்டுக் கேட்டு மதுரை தனக்கன்குளத்தில் இன்று மாலை பரப்புரையைத் தொடங்கினார்.

இன்று இரவு 8 மணியளவில் மதுரை மாவட்டம் நாகமலை கீழக்குயில்குடி விலக்கு அருகே பரப்புரை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ்தான் கூறினார். தனது முதல்வர் பதவிக்கு வேட்டு வந்துவிட்டது என்பதை அறிந்து, திடீரென ஜெ.வின் சமாதிக்குச் சென்ற 40 நிமிடம் தியானம் மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அம்மாவின் ஆவியோடு பேசியதாகவும் கூறினார்' என்று சொல்லிவிட்டு அவர் தியானம் செய்ததைக் கிண்டல் செய்து, அதே போன்று நடித்தும் காட்டினார்.

மேலும் தனது உரையில், 'கருணாநிதி இறந்தபோது அண்ணா சமாதி அருகே அவருக்கு 6 அடி நிலம் தருவதற்கு மறுத்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. அதை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து கருணாநிதிக்கு சமாதி அமைத்தோம். நாகமலையை வருவாய் கிராமமாக அறிவித்து, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி மற்றும் வடிவேல்கரைக்கு பேருந்து வசதிகள் செய்து தருவோம். மேலும் சமணமலையின் கிரிவலப்பாதையைச் சீரமைத்து, தண்ணீர்ப் பிரச்சனைகளை தீர்த்து வைப்போம்.

திமுக-வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதைப்போல விவசாயிகளின் கடன்கள், கல்விக்கடன்கள், தாய்மார்கள் வங்கியில் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம்' என்றார். பெரம்பலூர் அதிமுக எம்எல்ஏ-வின் பாலியல் பிரச்சனை குறித்து முக ஸ்டாலின் பேசும்போது, அவரை தமிழரசன் என்றார். கூட்டத்திலிருந்த ஒரு தொண்டர் தமிழ்ச்செல்வன் என்று கூறியதும், 'பாருங்க... நான்கூட தப்பா சொல்லிட்டேன்... மக்கள் சரியா சொல்றாங்க..' என்ற சமாளித்தார். தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு செந்தமிழ் என பெயர் சூட்டினார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் அப்பகுதியில் பரப்புரைக்கு வருவதற்கு முன்னர், திரண்டு நின்ற கூட்டம் காரணமாக, ஆம்புலன்ஸ் ஒன்று சாலையைக் கடக்க முடியாமல் கால் மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்தது. பிறகு காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

(இதற்குரிய வீடியோக்கள் மோஜோ மூலமாக TN_MDU_02a_04_MKSTALIN_CAMPAIGN_NAGAMALAI_VISUAL_9025391 / TN_MDU_02b_04_MKSTALIN_CAMPAIGN_NAGAMALAI_VISUAL_9025391 / TN_MDU_02c_04_MKSTALIN_CAMPAIGN_NAGAMALAI_VISUAL_9025391 / TN_MDU_02d_04_MKSTALIN_CAMPAIGN_NAGAMALAI_VISUAL_9025391 / TN_MDU_02e_04_MKSTALIN_CAMPAIGN_NAGAMALAI_VISUAL_9025391என்ற பெயரில் இரவு 9 மணியளவிலிருந்து 9.45க்குள் அனுப்பப்பட்டுள்ளன)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.