மதுரை: இந்தியக் கடற்படையால் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான மீனவர் வீரவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று (அக். 21) காலை அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் நலமாக உள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரவேலை மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து நிவாரணத் தொகையாக 2 லட்சம் ரூபாயை அவரது மனைவி மதுமதியிடம் வழங்கினர்.
உடனடியாக தனது கணவர் வீரவேலுக்கு மதுரையில் மேல் சிகிச்சை அளித்து நிவாரண தொகை வழங்கியதற்காக வீரவேல் மனைவி மதுமதி நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழிசைக்கு எதிராக போஸ்டர் ஒட்ட மாட்டோம் - கைது செய்யாமலிருக்க நிபந்தனை