ETV Bharat / state

தி.மு.க.விற்கு இனி எதிர்காலமே கிடையாது: செல்லூர் ராஜு - மதுரை அண்மை செய்திகள்

மதுரை: தி.மு.க.விற்கு இனி எதிர்காலமே கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜு
author img

By

Published : Mar 4, 2020, 1:16 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: எவ்வித செலவுமில்லாமல் ஊடகம் வாயிலாக, இலவசமாக பிரபலமானவர் வனத்துறை அமைச்சர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார், வருவாய்த்துறை அமைச்சர். மாணவர்கள் மத்தியில் பேசும்போது, அவர்களுக்கு போர் அடித்து விட்டால் ’ஓ’ என்று கத்தி விடுவார்கள். அதனை ஊடகத்தினை சேர்ந்தவர்கள், ’அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதற்கு மாணவர்கள் எதிர்ப்பு’ என வெளியிடுவார்கள். இது போன்ற சூழல்களின் மத்தியில், என்ன பேச வேண்டுமென்று தெரியவில்லை.

எங்கள் தலைவராகிய எம்.ஜி.ஆர்ருக்கும், தாய் ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் இல்லை. ஆதலால், அவர்களின் சம்பாத்தியத்தை மக்களுக்கு கொடுத்து சென்றார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வீதி ஜோசியர் போல, அ.தி.மு.க.,வின் ஆட்சி இன்று, நாளை, அடுத்த வாரத்திற்குள் கலையும் என்று கூறினார். இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வெற்றியை கண்டு அரண்டு போய் கிடக்கிறார். திமுகவிற்கு இனி எதிர்காலமே கிடையாது. திராவிடக் கட்சி என்று கூறி, இன்றைக்கு பீகார் காரனை நம்பியுள்ளது.

எம்.ஜி.ஆர் 10000 கிமீக்கு அப்பால், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் வெற்றி பெற்றார். இதைப் போல, ஸ்டாலினால் தற்போதைய காலக்கட்டத்தில் வெல்ல முடியுமா? என்பது மிகப் பெரிய கேள்வி. கூட்டுறவுத்துறை வாயிலாக நான்தான் உங்களுக்கு பொங்கல் பரிசாக, ஆயிரம் ரூபாய் வழங்கினேன். இதில், 1 கோடியே 37 லட்சம் குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளார்கள். இன்றைக்கு கூட்டுறவுத்துறையில் முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில பெண்கள் பாதுகாப்பு நாள் அறிவித்து இருப்பது, எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனையாக உள்ளது. தாய், குழந்தை திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் வழங்கியது தமிழக அரசு. அதனால், இன்றைக்கு தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதைப் போல, முதலமைச்சர் வழங்கிய கோழிக்குஞ்சுகள், காலையில் நம்மை எழுப்புகின்றன, என்றார்.

இதையும் படிங்க: 'திமுகவின் கொ.ப.செ. நயன்தாரா... கி. வீரமணி இருக்கும்வரை திமுக உருப்படாது!' - ராதாரவி தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.