மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (ஜன.15) மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. கரோனா விதிமுறைகளுடன் கூடிய ஜல்லிக்கட்டுப்போட்டியினை இன்று காலை 8 மணிக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், 'அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வரவில்லை. அவர்கள் அரசியலை முன்னிறுத்தியே ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வந்தனர்' எனக் குற்றம்சாட்டினார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், வரும் 30ஆம் தேதி திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கட்டியுள்ள கோயிலைத் திறந்து வைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்றுவரும் பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் 95 காளைகள் களம் கண்டுள்ள நிலையில், இரண்டாம் சுற்றுக்கான போட்டிகளில் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: உடனுக்குடன்:பாலமேடு ஜல்லிக்கட்டு... காளையுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்!