ETV Bharat / state

'ஸ்டாலின் போராடுவது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காகவே' - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 29, 2019, 12:25 PM IST

மதுரை: ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழ்நாடு உரிமைக்காக அல்ல, அவரது மகன் உதய நிதியை பதவி அதிகாரத்திற்கு வர வைப்பதற்காக மட்டுமே என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Campaign
Campaign

இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவுற்றது. இறுதி கட்ட பரப்புரையில் அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ' பொங்கல் விடுமுறை அன்று பிரதமரின் உரையைக் கேட்பதற்காக பள்ளிக்கு மாணவர்கள் வரவேண்டும் என்று கூறப்பட்டதற்கு, ஸ்டாலின் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தது குறித்து வினா எழுப்பப்பட்டது.

' ஸ்டாலின் போராடுவதற்குக் காரணங்களைத் தேடுகிறார். அடுத்தடுத்து போராடுவதற்கு எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் எதிர்க்கட்சி உள்ளது. தமிழகத்தின் உரிமைக்காக எதிர்க்கட்சி போராடாமல், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினை உருவாக்குவதற்காக, அதிகாரத்தில் அமர வைப்பதற்காக ஸ்டாலின் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்' என்றார்.

பரப்புரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

இதையும் படிங்க: பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா ? - ஸ்டாலின் கேள்வி

Intro:*பொங்கல் விடுமுறையில் மாணவர்களை பிரதமர் உரை கேட்பதற்காக பள்ளிக்கு அழைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று ஸ்டாலின் கூறியதற்கு, ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழக உரிமைக்காக அல்ல அவரது மகன் உதயநிதியை பதவி, அதிகாரத்திற்கு வர வைப்பதற்காக மட்டுமே - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*Body:*பொங்கல் விடுமுறையில் மாணவர்களை பிரதமர் உரை கேட்பதற்காக பள்ளிக்கு அழைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று ஸ்டாலின் கூறியதற்கு, ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழக உரிமைக்காக அல்ல அவரது மகன் உதயநிதியை பதவி, அதிகாரத்திற்கு வர வைப்பதற்காக மட்டுமே - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*

இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலின் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவுற்றது இறுதிக்கட்ட பிரச்சாரமாக அதிமுக சார்பில் வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காண கேணி என்ற பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறும்போது.

_குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் வாக்கு வங்கி குறைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு_

பிடிக்காத மாமியாரை பிடிக்காத மருமகள தொட்டால் குற்றம் உட்கார்ந்தால் குற்றம் என்று எது செய்தாலும் குற்றம் சொல்லத்தான் செய்வார்கள் அதை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

நமது கடமையை நாம் சரியாக செய்தால் போதும்.

_பொங்கல் விடுமுறை அன்று பள்ளி மாணவர்கள் பிரதமரின் உரையைக் கேட்பதற்காக பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறினால் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியது குறித்த கேள்விக்கு_

ஸ்டாலின் போராடுவதற்கு காரணம் தேடுகிறார்கள். அடுத்தடுத்து போராடுவதற்கு எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் எதிர்க்கட்சி உள்ளது.

ஒரு காலத்தில் எதிர்க்கட்சி போராட்டம் நடத்துகிறது என்று சொன்னால் தமிழகத்தின் உரிமைக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்காக தமிழகத்தின் நல்வாழ்வுக்காக பாதுகாப்பிற்காக வளர்ச்சிக்காக அவர்கள் போராடுவார்கள் இப்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினை உருவாக்குவதற்காக அதிகாரத்தில் அமர வைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றார்.

அதனால்தான் இந்த மக்கள் அவருக்கு தோல்விகளை பரிசாக கொடுக்கிறார்கள். பொது நலத்தை மறந்து சுயநலமாக அவர் செயல்படுவதால் தான் மக்கள் அவருக்கு தோல்வியினை கொடுக்கிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.