மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட நிலையூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு நியாய விலைக்கடையினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு குத்து விளக்கேற்றி திறந்துவைத்தார். அவருடன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது, “பொதுமக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை நிறைவேற்றும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆட்சியில் இருக்கும்போதே இந்திய துணைக் கண்டத்திலேயே எந்த ஒரு அரசும் வழங்காத சலுகையாக விவசாயிகளுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்த ஒரே அரசு அதிமுக அரசு தான்.
2 கோடிய 7 லட்சத்து 37 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் மட்டுமே பேசுவார். தினம் தினம் என்ன பொய் பேசுவது என சிந்திப்பவர் தான் அவர்.
திமுக ஆட்சிக்காலத்தில், வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்று வந்தால் போதும் அதனை பட்டா போட்டு விற்று விடுவார்கள். ஸ்டாலினின் கூட்டங்களில் வைக்கும் மனுவிற்கான பெட்டியின் பூட்டினை ஸ்டாலின் திறக்க பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள்
இதையும் படிங்க: “ஸ்டாலின் வாராரு விடியல் தரப் போறாரு” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சியில் பாடிய சிறுவர்கள்!