ETV Bharat / state

'மங்குனி அமைச்சர் 2021இல் சிறை செல்வது உறுதி' - காட்டமான விருதுநகர் எம்.பி!

author img

By

Published : Oct 6, 2019, 11:15 PM IST

மதுரை: அதிமுக ஆட்சி முடிவடைந்து 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பின் மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறையில் இருப்பார் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்தார்.

மாணிக் தாகூர்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரை மத்திய அரசு விளம்பரத்திற்காக செய்ததா என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அவசர அவசரமாக இங்குவந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் 6 மாதங்களாகியும் எந்த ஒரு வேலையும் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சரை சந்தித்து நிச்சயம் கேள்வி எழுப்புவோம்.

விருதுநகர் எம்.பி.மாணிக் தாகூர்

நம்முடைய மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பொறுத்தமட்டில், நிதானம் இழந்துவிட்டார். சோனியா காந்தியிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் அவரை சிவகாசியிலேயே நிராகரிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம். 2021ஆம் ஆண்டு நிச்சயம் சிறையில் இருப்பார்.

மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதற்கான அனைத்து விஷயங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. மங்குனி அமைச்சர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதற்கான மிக முக்கியமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இது அனைத்திலிருந்தும் பாஜகவைச் சார்ந்தவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறார்.

நாங்குநேரியில் நிச்சயம் காங்கிரஸ் வெற்றிபெறும். நாடாளுமன்றத் தேர்தலின்போது இப்படித்தான் அதிமுகவினர் வசனம் பேசிக்கொண்டிருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை விட்டுவிட்டு இடைத்தேர்தல்களில் சென்று, பணம் கொடுத்து வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் அதிமுகவினர் இருக்கிறார்கள். எனவே அவர்களின் தோல்வி உறுதியானது’ என்றார்.

இதையும் படிக்கலாமே: கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ

Intro:*சோனியா காந்தியிடம் மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் - 2021 ஆம் ஆண்டு மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி - விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி*Body:*சோனியா காந்தியிடம் மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் - 2021 ஆம் ஆண்டு மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி - விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி*

மதுரை விமான நிலையத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி

எய்ம்ஸ் மருத்துவமனை பொறுத்தமட்டில் மத்திய அரசு விளம்பரத்திற்காக செய்ததா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

தேர்தலுக்கு முன்பாக மோடி அவர்கள் அவசர அவசரமாக இங்குவந்து அடிக்கல் நாட்டியபோது அதற்குப் பின்னாலே 6 மாதம் 7 மாதம் ஆகியும் அவர்கள் எந்த ஒரு வேலையும் தொடங்க வில்லை என்ற செய்திதான் வருகிறது நாம் தொடர்ந்து இதற்காக வலியுறுத்துவோம் டெல்லியிலே இதற்காக அமைச்சரை சந்தித்து என்ன நடக்கிறது என்ற கேள்வியினை அவசியம் கேட்போம்.

_சோனியா காந்தி பிறப்புச் சான்றிதழை காட்டுங்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியது பற்றிய கேள்விக்கு_

நம்முடைய மங்குனி அமைச்சர் பொறுத்தமட்டில் நிதானம் இழந்துவிட்டார் தேவையில்லாத பேச்சுக்களை பேசிக் கொண்டிருக்கிறார்.

அவரைப் பொறுத்தமட்டில் உண்மையான விஷயங்களில் இருந்து ஓட வேண்டும் என்று நினைக்கிறார் மங்குனி அமைச்சர்.

சிவகாசி திருத்தங்கல் பாலத்தை ஏன் நிறுத்துகிறார் என்று கேள்வி கேட்டிருந்தேன் மங்குனி அமைச்சரின்னுடைய சொத்து குவிப்பு மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது மங்குனி அமைச்சர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதற்கான அனைத்து விஷயங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது மங்குனி அமைச்சரின்னுடைய மணல் கொள்ளையில் மிக முக்கியமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன இது அனைத்திலிருந்தும் பாஜகவை சார்ந்தவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறார்.

மு க ஸ்டாலின் அவர்கள் சொன்னதை போல இந்த அரசு அதிமுக அரசு அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து மங்குனி அமைச்சர் தான்.

ராஜேந்திர பாலாஜி பொறுத்தமட்டில் சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இவரைப் பொறுத்த மட்டில் மக்கள் இவரை சிவகாசியிலேயே நிராகரிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் ஜெயலலிதா அவர்களின் புண்ணியத்தால் இவர் வெற்றி பெற்று வந்தார் இவர் இருக்கின்ற இடம் தெரியாமல் ஏதாவது ஒரு சிறையில் 2021ல் இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

_டெங்கு காய்ச்சல் குறித்த கேள்விக்கு_

டெங்கு காய்ச்சல், தண்ணீர் பிரச்சனை இப்படி மிக முக்கியமான பிரச்சினைகளில் எந்த ஒரு ஆர்வம் காட்டாமல் தமிழக அமைச்சர்கள் அமெரிக்கா செல்வதும் இஸ்ரேல் செல்வதும் பின்லாந்து செல்வதும் நார்வே செல்வதுமாக வெளிநாட்டு பயணங்களில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.

பின் இடைத்தேர்தலை சென்று பணம் கொடுப்பதற்காக அமர்ந்து விடுவார்கள் இவர்களைப் பொறுத்தமட்டில் நிர்வாகம் சீரழிந்து விட்டது இது ஒரு பிஜேபி ஆட்சி நடக்கிறது என்பதற்கு முழுமையான அத்தாச்சி கொண்ட மாநிலமாக இது மாறிவிட்டது உண்மையான மக்கள் பிரச்சனைகளை மறந்து இருக்கிறார்கள் கலெக்ஷனும் கமிஷனும் கொண்ட ஆட்சியாக இது மாறி இருக்கிறது.

_சிவகாசி பசுமை பட்டாசு விற்பனை பற்றிய கேள்விக்கு_

சிவகாசியை பொறுத்தமட்டில் சிவகாசியின் வாழ்வாதாரமாக இருப்பது பட்டாசு தொழிலில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக நான்கு மாதங்கள் தேர்தலுக்கு முன்பாக மிக மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது அதற்கு முழு காரணம் மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்பட்ட தவறான விளைவாக இது ஏற்பட்டது.

இவர்கள் மீண்டும் இது போன்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் இவர்களைப் பொருத்தமட்டில் பட்டாசு தொழிலில் ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற நிலையில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எங்களை பொருத்தமட்டில் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் கொடுத்தோம் தொடர்ந்து குரல் கொடுப்போம் சிவகாசி பட்டாசை காப்போம்.

_நாங்குநேரியில் காங்கிரஸ் டக் அவுட் ஆகும் என்று ஆர் பி உதயகுமார் கூறியது பற்றிய கேள்விக்கு_

யார் டக் அவுட் ஆவார் என்பது தேர்தல் வந்தவுடன் தெரிய போகிறது பாராளுமன்ற தேர்தலில் இப்படித்தான் வசனம் பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள் என்று நமக்கு தெரியும் இவர்களைப் பொறுத்தமட்டில் இவர்களுடைய நோக்கம் எல்லாம் உண்மையான ஆட்சி செய்கின்ற பொறுப்பை வருவாய்த்துறை அமைச்சர் மற்ற எந்தத் துறை அமைச்சர்களும் பார்ப்பதில்லை டெங்கு பிரச்சனையும் தண்ணீர் பிரச்சனையும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது இந்த பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு இடைத்தேர்தல்களில் சென்று பணம் கொடுத்து வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் இருக்கிறார்கள் இவர்கள் தோல்வி உறுதியான தோல்வி அது நான்குநேரியுலும் சரி விக்கிரவாண்டியிலும் சரி என கூறினார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.