ETV Bharat / state

'அதிமுக வெற்றி பெற வாழ்த்துக் கூறிய கமலுக்கு நன்றி' - புதுவித விளக்கமளித்த ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Feb 13, 2020, 4:26 PM IST

மதுரை: அதிமுக அரசு மீண்டும் வெற்றி பெறும் என முன்கூட்டியே தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

R. B. Udhaya Kumar about Kamal Haasan
R. B. Udhaya Kumar thanks to Kamal Haasan

மதுரை திருமங்கலத்தை அடுத்த அம்மாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில், புதிய ஊராட்சி மன்ற கட்டடத்தின் பூமி பூஜை ரூ. 19.72 லட்சம் செலவில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ' அதிமுக கழக அம்மா பேரவை சார்பாக, உழவர்களை எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் உறுதியாக ஏற்க மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

முதலமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கின்ற டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மாற்றவேண்டும் என்ற சிறப்பு மிக்க அறிவிப்பை கொடுத்துள்ளார். இதற்கு விவசாயிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை திசைதிருப்பும் வகையில் திமுகவினர் அவதூறு பரப்புரை செய்து வருகிறார்கள்.

அதிமுக வெற்றி பெற வாழ்த்துக் கூறிய கமல் - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

டெல்லியைப் போலவே தமிழ்நாடு மாற வேண்டும் என கமல்ஹாசன் கூறியதுபோல, டெல்லியைப் போல் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டிலும் அதிமுக அரசு வெற்றி பெறும் என முன்கூட்டியே அறிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி' எனக் கூறினார்.

இதையும் படிங்க: விவசாயி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.