ETV Bharat / state

மதுரை கலைஞர் நூலகம் திறப்பு எப்போது? - நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு! - Minister ptr Palanivel thiyagarajan

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 20, 2023, 1:24 PM IST

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மூன்றாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அதில், தமிழ் வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி, பள்ளிக் கல்வி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறப்பு: சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் இல்லத்தரசிகள் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான நூலகச் சூழல், இணையவசதியுடன் கூடிய சிறப்புப் பிரிவு, பார்வைத் திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள், குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்குகள், தென்தமிழகத்தின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் கலை அரங்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படைப்புகள், பேச்சுகள் இடம் பெறும் வகையில் எழிலார்ந்த சிறப்பம்சங்கள் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.

முதற்கட்டமாக, இந்த நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட் 2023 -24 முக்கிய அறிவிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.