மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அலுவலராக இரணியன் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆவின் நிறுவனத்தில் நேற்று(மே.17) ஆய்வு செய்தார். பொதுமேலாளர் கருணாகரனிடம் முறைகேடு தொடர்பாக அவர் கேட்டறிந்தார். மேலும் ஆவின் அலுவலர்களை தனித்தனியாக அழைத்து முறைகேடுகள் குறித்து விசாரித்தார். இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணை அலுவலர் இரணியனிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, ஆவின் அலுவலர்கள், ஊழியர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, "ஆவின் முறைகேடுகளிலிருந்து யாரும் தப்ப முடியாது. முறைகேடுகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.