ETV Bharat / state

கமல்ஹாசன் அதற்கு ஒத்துவர மாட்டார் - செல்லூர் ராஜு - Actor Kamal Haasan will not conform to politics

மதுரை: நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டில் நிலைக்காது என்றும், நடிகர் கமல்ஹாசன் போன்றவர்களுக்கு அரசியல் ஒத்துவராது எனவும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

minister sellur raju
minister sellur raju
author img

By

Published : Jan 1, 2021, 5:31 PM IST

ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்செய்த அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாடு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அதிமுக அரசு செய்துள்ளது. ஆகையால் வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும்.

நடிகர் கமல்ஹாசன் அதற்கு ஒத்துவரமாட்டார்

நடிகர்களால் ஆரம்பிக்கப்படும் கட்சிகள் எல்லாம் நிலைத்து நிற்காது. நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார். மூன்று நாள்கள் தேர்தல் பரப்புரைக்கு வருவார் பின்பு படப்பிடிக்குச் சென்றுவிடுவார்.

மக்களின் எதிர்பார்ப்பைச் செய்துகொடுக்க எங்களைப் போன்ற அரசியல்வாதிகளே எப்போதும் இருக்கிறோம். ஆகவே கமல்ஹாசன் போன்றவர்களுக்கு அரசியல் ஒத்துவராது" என்றார்.

இதையும் படிங்க: சென்னையிலிருந்து மைசூர், பெங்களூருக்கு 4 சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.