ETV Bharat / state

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு தடை! - நீதிமன்ற உத்தரவு

Minister Udayanidhi banned for talking about EPS in Kodanad murder case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களைத் தெரிவிக்க கூடாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-says-minister-udayanidhi-banned-from-talking-about-eps-in-kodanad-murder-case
கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 2:42 PM IST

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கோடநாடு கொலை - கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்" என தெரிவித்து இருந்தார்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் என்னை தொடர்புபடுத்தி போசுவதால் என் பெயருக்கு கலங்கம் எற்படுகிறது என கூறி உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிராக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டும், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குளில் என்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது,

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வரும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒரு முறை கூட என்னை விசாரணைக்கு அழைக்கவில்லை, விசாரிக்கப்படவில்லை. மேலும், கோடநாடு கொலை வழக்கு குறித்த அரசு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போனிற்கு சைரன் ஒலியுடன் வந்து அவசர எச்சரிக்கை! மக்களே பயப்பட தேவையில்லை!

திமுக முக்கிய நிர்வாகி 2018ல் அளித்த ஊழல் புகாரில் ஆதாரங்கள் இல்லை என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் அளிக்கப்பட்டு, அதை அரசும் ஏற்றுள்ளதாகவும், இது சம்பந்தமான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்கள், எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்ததாகவும், அதை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவதூறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம் என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களிலிருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், மேற்கொண்டு இதுபோல அறிக்கைகள் வெளியிட கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனக் கூறி, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து 2 வாரங்களில் உதயநிதி ஸ்டாலின் பதலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காவிரி நீர் பங்கீடு: கர்நாடகா அரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு - உச்ச நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.