ETV Bharat / state

மதுரை கண்மாயில் கொட்டப்பட்ட 20 டன் மருத்துவக் கழிவுகள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

author img

By

Published : Nov 13, 2019, 9:25 PM IST

மதுரை: கருப்பாயூரணி வீரபாஞ்சன் கிராமத்திலுள்ள கண்மாயில் அடையாளம் தெரியாத நபர்களால் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, அப்பகுதி மக்கள் பொதுப் பணித்துறையினரின் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.

Medical waste dumped in Veerapanchan

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்த மழையால் வீரபாஞ்சன் கிராம கண்மாய் நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்தக் கண்மாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர்களால் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் ஏறக்குறைய 20 டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நீர் நிரம்பியுள்ள கண்மாயில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால், இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது கண்மாயில் கொட்டப்பட்ட கழிவுகளை, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர் உதவியோடு அகற்றி வருகின்றனர்.

மருத்துவக் கழிவுகளை டிராக்டர் மூலம் அள்ளும் பொதுப்பணித்துறையினர்

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பொதுப்பணித்துறையினர், இதுபோன்று கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: வாக்கு எந்திரங்களை சேமிக்கும் கிடங்குகள் அமைக்க ரூ.120.87 கோடி நிதி ஒதுக்கீடு!

Intro:மதுரை அருகே மர்மநபர்களால் நள்ளிரவு கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் - மக்கள் அதிர்ச்சி

மதுரை அருகே மர்ம நபர்களால் மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கண்மாய்கள் கொட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Body:மதுரை அருகே மர்மநபர்களால் நள்ளிரவு கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் - மக்கள் அதிர்ச்சி

மதுரை அருகே மர்ம நபர்களால் மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கண்மாய்கள் கொட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ளது வீரபாஞ்சான் எனும் கிராமம். கிராமத்தின் அருகில் உள்ள கண்மாயில் நள்ளிரவு மர்ம நபர்களால் மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

அண்மையில் பெய்த மழை காரணமாக கண்மாயில் நீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் மர்மநபர்களால் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்பட்டுள்ளன. இந்த கழிவுகள் ஏறக்குறைய 20 டன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கண்மாயில் கொட்டப்பட்ட கழிவுகளை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுப்பணித் துறையினர் உதவியோடு தற்போது அகற்றி வருகின்றனர்.

மழை பெய்து நீர் நிரம்பியுள்ள நிலையில் இங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கால்நடைகளும் மிக கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவ்வாறு கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுப்பணித் துறை தரப்பில் இருந்து, அனுமதியின்றி கழிவுகளைக் கொட்டுவது நீர்நிலைகளை மாசுபடுத்துவது மிக தவறாகும். வீரபாஞ்சன் கண்மாயில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள கழிவுகளை முழுவதுமாக அகற்றி வருகிறோம் என்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.