ETV Bharat / state

அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர் !

மதுரை : திமுக சர்பில் வாக்குசாவடியில் முகவர்களாக நியமனம் செய்யப்பட்ட இருவர், அங்கீகாரமில்லாத அட்டை வைத்திருந்ததால் காவல்துறை கைது செய்ததை கண்டித்து திமுகவினர் காவல் நிலைத்தை முற்றுகையிட்டனர்.

திமுகவினர்
author img

By

Published : May 19, 2019, 11:14 PM IST

திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் அவனியாபுரம் அயன்பாப்பாகுடி எண் 149 ல் வாக்குசாவடியில் திமுக சர்பில் முகவர்களாக நியமனம் செய்யப்பட்ட பாலாஜி (23) கார்த்திக் (21) என்ற இருவரின் வாக்குச்சாவடி முகமை அங்கீகார அட்டையில் தேர்தல் அலுவலரின் முத்திரை இல்லாமல் இருந்ததால், போலி எனக் கருதி அவர்களை காவல் துணை ஆணையர் அலெக்ஸாண்டர் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்துள்ளார். அதற்குள் இது குறித்து, தகவலறிந்து திமுக தொழில் நுட்ப பிரிவு மாநில செயலர் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி உட்பட 70க்கும் மேற்பட்டோர் அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர் !

விசாரணைக்கு பின் அது போலியில்லை என உறுதியானதை அடுத்து பாலாஜி, கார்த்திக் இருவரையும் காவல் துறை விடுவித்தனர். இது குறித்து செய்தியாளார்களிடம் தியாகராஜன் பேசுகையில், இது தேர்தல் அலுவலர்களின் தவறு. இதற்காக இருவரையும் காவல் நிலையால் அழைத்து வந்ததை கடுமையாக கண்டிக்கிறோம். திமுக தரப்பில் தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளிக்கவுள்ளோம், என்றார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
19.05.2019

போலி வாக்குசாவடி முகமை சீட்டு என வாலிர்களை விசாரணைக்கு அழைத்து காவல் துறையை கண்டித்து திமுக வினர் அவனியாபுரம் காவல் நிலையம் முற்றுகை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறும் அவனியாபுரம் அயன் பாப்பா குடி வாக்குசாவடி எண் 149 ல் சாருஹாசன் எனும் சுயேட்சை வேட்பாளரீன் முகவர்களாக நியமனம் செய்யப்பட்ட பாலாஜி (23) கார்த்திக் (21) என்ற இருவரின் வாக்கு சாவடி முகமை அங்கீகார அட்டையில் தேர்தல் அலுவலரின் முத்திரை  இல்லாமல் இருந்ததால் அது போலி என கருதி அவர்களை காவல் தானை ஆணையர் அலெக்ஸாண்டர் விசாரணைக்கு அவனியாபுரம் காவல் நிலையம் அழைத்து வந்தன். இது குறித்து தகவலறிந்து வந்து திமுக தொழில் நுட்ப பிரிவு  மாநில செயலர் P TR. தியாகராஜன் , மதுரை மாநகர் மாவட்ட செலாளர் தளபதி ஆகியோர் அடங்கிய 70க்கும் மேற்பட்டோர் அவனியாபுரம் காவல் நிலைத் தை முற்றுகை யிட்டனர். பின்னர் போலீஸார் பாலாஜி, கார்த்திக் அவர்கள் இருவரையும் விடுவித்தனா .இது குறித்து திமு க  தரப்பில் தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் ஆகியோரிடம் புகார் அளிப்பதாக P.T .R .தியாகராஐன் MLA . கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.