இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வண்டி எண் 02638/02637 மதுரை பாண்டியன் சிறப்பு ரயிலில் கூடுதலாக ஒரு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது.
இந்தக் கூடுதல் பெட்டி மதுரையிலிருந்து ஆகஸ்ட் 23 செல்லும் சிறப்பு ரயிலிலும், சென்னையில் இருந்து ஆகஸ்ட் 26 செல்லும் சிறப்பு ரயிலிலும் இணைக்கப்படும். இந்த கூடுதல் பெட்டி, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக இணைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்கள் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, மூன்று குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஆறு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஏழு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகளுடன் இயக்கப்படும்". என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :சாய்னா நேவால் பாராட்டவில்லை - பி.வி. சிந்து