மதுரை கரிமேடு பகுதியில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனத்தில் அப்பகுதி மகளிர் சுய உதவிக் குழு சார்பில் 150 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள், கடன் பெற்று அதனை வார தவணையாகவும் மாதத் தவணையாகவும் செலுத்தி வருகின்றனர்.
தற்போது ஊரடங்கு காலகட்டத்தில் தினக்கூலிக்கு செல்லும் பெண்கள் தவணைத் தொகையைக் கட்ட முடியாத நிலையில், அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அப்பெண்களை தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
![madurai women self help group complains on finance interest company](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-03-micro-finance-women-script-7208110_08082020210515_0808f_1596900915_1.png)
இதையும் படிங்க: கடும் நிதி நெருக்கடியில் தமிழ்நாடு அரசு? - சட்ட பஞ்சாயத்து இயக்கம் கூறும் ஆலோசனைகள்!